கால்பந்து

பெண்கள் உலக கோப்பை கால்பந்து: பிரேசில் அணி வெற்றி + "||" + Women's World Cup Football: Brazil team win

பெண்கள் உலக கோப்பை கால்பந்து: பிரேசில் அணி வெற்றி

பெண்கள் உலக கோப்பை கால்பந்து: பிரேசில் அணி வெற்றி
பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில், பிரேசில் அணி வெற்றிபெற்றது.
பாரீஸ்,

24 அணிகள் இடையிலான 8-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் நடந்து வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஜமைக்காவை சாய்த்தது. பிரேசில் வீராங்கனை கிறிஸ்டியன் ரோஸிரா (15, 50, 64-வது நிமிடம்) மூன்று கோல்களையும் அடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். மற்ற ஆட்டங்களில் இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவையும் (சி பிரிவு), நார்வே 3-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவையும் (ஏ பிரிவு) தோற்கடித்தது.