கால்பந்து

பெண்கள் உலக கோப்பை கால்பந்து: அமெரிக்க அணி அடுத்த சுற்றுக்கு தகுதி + "||" + Women's World Cup Football: The US team qualifies for the next round

பெண்கள் உலக கோப்பை கால்பந்து: அமெரிக்க அணி அடுத்த சுற்றுக்கு தகுதி

பெண்கள் உலக கோப்பை கால்பந்து: அமெரிக்க அணி அடுத்த சுற்றுக்கு தகுதி
பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில், அமெரிக்க அணி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றது.
பாரீஸ்,

24 அணிகள் இடையிலான 8-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த ‘எப்’ பிரிவு ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் அமெரிக்க அணி 3-0 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. அமெரிக்க அணியில் கார்லி லாய்ட் 2 கோலும், ஜூலி எர்ட்ஸ் ஒரு கோலும் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. அமெரிக்க அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை மறுநாள் (20-ந் தேதி) சுவீடனுடன் மோதுகிறது.