உலக கோப்பை கால்பந்து: இங்கிலாந்து, ஜப்பான் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி


உலக கோப்பை கால்பந்து: இங்கிலாந்து, ஜப்பான் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி
x
தினத்தந்தி 20 Jun 2019 10:00 PM GMT (Updated: 20 Jun 2019 9:42 PM GMT)

24 அணிகள் பங்கேற்றுள்ள 8–வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது.

பாரீஸ், 

24 அணிகள் பங்கேற்றுள்ள 8–வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் ‘டி’ பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து–ஜப்பான் அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி 2–0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி தொடர்ச்சியாக 3–வது வெற்றியை ருசித்தது. இங்கிலாந்து அணியில் எலென் ஒயிட் 14–வது மற்றும் 84–வது நிமிடங்களில் கோல் அடித்தார். இதேபிரிவில் மோதிய அர்ஜென்டினா–ஸ்காட்லாந்து அணிகள் இடையிலான ஆட்டம் 3–3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. லீக் ஆட்டம் முடிவில் இங்கிலாந்து (9 புள்ளிகள்), ஜப்பான் (4 புள்ளிகள்) அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. 1 புள்ளி பெற்ற ஸ்காட்லாந்து அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. அர்ஜென்டினா அணி 2 புள்ளிகளுடன் தனது பிரிவில் 3–வது இடத்தில் உள்ளது. பிற பிரிவு அணிகளின் ஆட்ட முடிவை பொறுத்தே அர்ஜென்டினா அணி அடுத்த சுற்றுக்குள் நுழைவது முடிவாகும்.


Next Story