பெண்கள் உலக கோப்பை கால்பந்து: அமெரிக்க அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி


பெண்கள் உலக கோப்பை கால்பந்து: அமெரிக்க அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி
x
தினத்தந்தி 21 Jun 2019 9:45 PM GMT (Updated: 21 Jun 2019 9:35 PM GMT)

24 அணிகள் இடையிலான 8–வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் நடந்து வருகிறது.

பாரீஸ், 

24 அணிகள் இடையிலான 8–வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடந்தன. ‘எப்’ பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அமெரிக்கா 2–0 என்ற கோல் கணக்கில் சுவீடனை வீழ்த்தி தொடர்ந்து 3–வது வெற்றியை (ஹாட்ரிக்) ருசித்தது. அமெரிக்க அணியில் லின்ட்சே ஹோரன் (3–வது நிமிடம்) முதல் கோல் போட்டார். 50–வது நிமிடத்தில் சுவீடன் வீராங்கனை ஜோன்னா ஆண்டர்சன் சுயகோல் அடித்தார்.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் சிலி அணி 2–0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை தோற்கடித்து ஆறுதல் வெற்றியோடு வெளியேறியது. இந்த பிரிவில் அமெரிக்காவும், சுவீடனும் ஏற்கனவே 2–வது சுற்றுக்கு முன்னேறி விட்டன. அமெரிக்க அணி 24–ந்தேதி நடக்கும் 2–வது சுற்றில் ஸ்பெயினை சந்திக்கிறது.


Next Story