கால்பந்து

உலக கோப்பை கால்பந்து: இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் கால்இறுதிக்கு முன்னேற்றம் + "||" + World Cup Football: England, France advance to quarter-finals

உலக கோப்பை கால்பந்து: இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் கால்இறுதிக்கு முன்னேற்றம்

உலக கோப்பை கால்பந்து: இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் கால்இறுதிக்கு முன்னேற்றம்
உலக கோப்பை கால்பந்து போட்டியில், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறி உள்ளன.
பாரீஸ்,

24 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் (ரவுண்ட் 16) இங்கிலாந்து-கேமரூன் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் கேமரூனை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறியது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டீபானி ஹவுட்டன் 14-வது நிமிடத்திலும், எலென் ஒயிட் 45-வது நிமிடத்திலும், அலெக்ஸ் கிரீன்வுட் 58-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ்-பிரேசில் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் ஆடிய பிரான்ஸ் அணி, பிரேசில் அணிக்கு கடும் சவாலாக விளங்கியது. பிரான்ஸ் அணி வீராங்கனை வாலெரி கெவின் 52-வது நிமிடத்தில் கோல் அடித்தார். பிரேசில் அணி வீராங்கனை தைசா டி மொரஸ் 63-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலை வகித்தன. இதனால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் (107-வது நிமிடம்) பிரான்ஸ் வீராங்கனை அமன்டின் ஹென்றி வெற்றிக்கான கோலை அடித்தார். முடிவில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை சாய்த்து கால்இறுதிக்குள் நுழைந்தது.தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்தியா-ஓமன் அணிகள் இன்று மோதல்
உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்தியா-ஓமன் அணிகள் கவுகாத்தியில் இன்று மோதுகின்றன.
2. ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து? - ஆஷஸ் 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.
3. இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் முதலாவது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
4. டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: அயர்லாந்தை 38 ரன்னில் சுருட்டி இங்கிலாந்து வெற்றி
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், அயர்லாந்தை 38 ரன்னில் சுருட்டி இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.
5. இங்கிலாந்து புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு
இங்கிலாந்தின் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார்.