பெண்கள் உலக கோப்பை கால்பந்து: அமெரிக்கா, சுவீடன் கால்இறுதிக்கு தகுதி


பெண்கள் உலக கோப்பை கால்பந்து: அமெரிக்கா, சுவீடன் கால்இறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 25 Jun 2019 11:14 PM GMT (Updated: 25 Jun 2019 11:14 PM GMT)

பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில், அமெரிக்கா, சுவீடன் அணிகள் கால்இறுதிக்கு தகுதிபெற்றன.

பாரீஸ்,

8-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் (ரவுண்ட் 16) நடப்பு சாம்பியன் அமெரிக்க அணி, ஸ்பெயினை சந்தித்தது. பரபரப்பான இந்த மோதலில் அமெரிக்கா 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை சாய்த்து கால்இறுதிக்கு முன்னேறியது. அமெரிக்க அணியில் மெகன் ராபினோ 7-வது மற்றும் 76-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். மற்றொரு ஆட்டத்தில் சுவீடன் 1-0 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.

Next Story