கால்பந்து

பெண்கள் உலக கோப்பை கால்பந்து: அரைஇறுதியில் இங்கிலாந்து + "||" + Women's World Cup Football: England in the semi-finals

பெண்கள் உலக கோப்பை கால்பந்து: அரைஇறுதியில் இங்கிலாந்து

பெண்கள் உலக கோப்பை கால்பந்து: அரைஇறுதியில் இங்கிலாந்து
பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியின் அரைஇறுதிக்கு இங்கிலாந்து அணி தகுதிபெற்றது.
பாரீஸ்,

8-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த முதலாவது கால்இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-நார்வே அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து 3-0 என்ற கோல் கணக்கில் நார்வேயை தோற்கடித்து தொடர்ந்து 2-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறியது. இங்கிலாந்து அணியில் ஜில் ஸ்காட் 3-வது நிமிடத்திலும், எலென் ஒயிட் 40-வது நிமிடத்திலும், லூசி பிரோன்ஸ் 57-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.