பெண்கள் உலக கோப்பை கால்பந்து: ஜெர்மனியை பழிதீர்த்தது சுவீடன்


பெண்கள் உலக கோப்பை கால்பந்து: ஜெர்மனியை பழிதீர்த்தது சுவீடன்
x
தினத்தந்தி 30 Jun 2019 10:45 PM GMT (Updated: 30 Jun 2019 10:12 PM GMT)

பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில் சுவீடன் அணி, ஜெர்மனியை வீழ்த்தி பழிதீர்த்து கொண்டது.

பாரீஸ்,

8-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் சுவீடன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் 2 முறை சாம்பியனான ஜெர்மனியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலை வகித்த நிலையில், 48-வது நிமிடத்தில் சுவீடனின் பிளாக்ஸ்டெனியஸ் வெற்றிக்குரிய கோலை அடித்தார். பெரிய தொடர்களில் சுவீடன் அணி, ஜெர்மனியை வீழ்த்துவது 1995-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். மேலும், 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியிடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்ட சுவீடன் அணி, இந்த வெற்றியின் மூலம் 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றது. அரைஇறுதி ஆட்டங்களில் இங்கிலாந்து-அமெரிக்கா, நெதர்லாந்து-சுவீடன் அணிகள் மோதுகின்றன.

Next Story