கால்பந்து

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி: உருகுவேக்கு அதிர்ச்சி அளித்தது பெரு + "||" + Copa America Football Tournament: Peru shocked Uruguay

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி: உருகுவேக்கு அதிர்ச்சி அளித்தது பெரு

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி: உருகுவேக்கு அதிர்ச்சி அளித்தது பெரு
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் கால்இறுதியில் பெரு அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் உருகுவேயை விரட்டியடித்தது.
சல்வடோர்,

46-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசிலில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை சல்வடோரில் நடந்த கால்இறுதி ஆட்டத்தில் 15 முறை சாம்பியனான உருகுவே அணி, பெருவை எதிர்கொண்டது.


அனுபவம் வாய்ந்த உருகுவே தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினாலும் அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை. வழக்கமான நேரத்தில் ஜியார்ஜியன் டி அராஸ்கட்டா, எடின்சன் கவானி, லூயிஸ் சுவாரஸ் ஆகிய வீரர்கள் கோல் அடித்த போதிலும் அது வீடியோ மறுஆய்வுக்கு பிறகு ‘ஆப்-சைடு’ என்று அறிவிக்கப்பட்டதால் உருகுவே அணியினர் ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள். ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் வெற்றி- தோல்வியை முடிவு செய்ய பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

இதில் இரு அணிகளுக்கும் தலா 5 பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. உருகுவே அணியின் முதல் வாய்ப்பில் நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரஸ் அடித்த பந்தை, பெரு கோல் கீப்பர் பெட்ரோ காலிஸ் வலது பக்கமாக பாய்ந்து விழுந்து தடுத்து ஹீரோவாக ஜொலித்தார். மற்ற வீரர்கள் அனைவரும் தங்களது வாய்ப்பை கோலாக்கியதால், சுவாரசின் தவறு உருகுவேயின் தோல்விக்கு காரணமாகி விட்டது.

பரபரப்பான பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் பெரு அணி 5-4 என்ற கோல் கணக்கில் உருகுவேக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. தோல்வியை தாங்க முடியாமல் லூயிஸ் சுவாரஸ் கண்ணீர் விட்டு அழுதார். உருகுவே அணிக்காக அதிக கோல் அடித்தவரான சுவாரசை சக வீரர்கள் ஆசுவாசப்படுத்தினர்.

பெரு அணி அரைஇறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் சிலியை சந்திக்கிறது. மற்றொரு அரைஇறுதியில் பிரேசில்-அர்ஜென்டினா அணிகள் மல்லுகட்டுகின்றன.