கால்பந்து

பெனால்டி ஷூட் வாய்ப்பை தவறவிட்ட கொலம்பியா கால்பந்து வீரருக்கு கொலை மிரட்டல் + "||" + Murder threatens Colombian football player who missed a penalty shoot opportunity

பெனால்டி ஷூட் வாய்ப்பை தவறவிட்ட கொலம்பியா கால்பந்து வீரருக்கு கொலை மிரட்டல்

பெனால்டி ஷூட் வாய்ப்பை தவறவிட்ட கொலம்பியா கால்பந்து வீரருக்கு கொலை மிரட்டல்
பெனால்டி ஷூட் வாய்ப்பை தவறவிட்ட கொலம்பியா கால்பந்து வீரருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
போகோடா,

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் நடந்து வருகிறது. இதன் கால்இறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட்-அவுட்டில் கொலம்பியா அணி 4-5 என்ற கோல் கணக்கில் சிலியிடம் தோற்று வெளியேறியது. இந்த ஆட்டத்தில் கொலம்பியா வீரர் வில்லியம் டெசில்லோ பெனால்டி ஷூட் வாய்ப்பில் கோல் அடிக்காமல் தவறவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்துள்ள கொலம்பியாவை சேர்ந்த ஒருவர் சமூக வலைதளம் மூலம் வில்லியம் டெசில்லோவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதில் ‘1994-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியில் சுய கோல் அடித்ததால் சுட்டு கொல்லப்பட்ட கொலம்பியா வீரர் ஆந்த்ரே எஸ்கோபருக்கு நேர்ந்த கதி தான் வில்லியம் டெசில்லோவுக்கும் ஏற்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தகவலை வில்லியம் டெசில்லோ உள்ளூர் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். ஆனால் அவர் போலீசில் புகார் எதுவும் செய்யவில்லை. இந்த மிரட்டல் குறித்து விசாரித்து வருவதாக கொலம்பியா போலீசார் தெரிவித்துள்ளனர்.