பெண்கள் உலக கோப்பை கால்பந்து: அமெரிக்க அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்லுமா? - நெதர்லாந்துடன் இன்று மோதல்


பெண்கள் உலக கோப்பை கால்பந்து: அமெரிக்க அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்லுமா? - நெதர்லாந்துடன் இன்று மோதல்
x
தினத்தந்தி 6 July 2019 11:31 PM GMT (Updated: 6 July 2019 11:31 PM GMT)

பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில், அமெரிக்க அணி, நெதர்லாந்துடன் இன்று மோத உள்ளது.

லயன்,

24 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் லயனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் அமெரிக்க அணி, நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் தோல்வியை சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கின்றன. சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி டென் 2 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. அடுத்த பெண்கள் உலக கோப்பை போட்டியில் (2023) பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 24-ல் இருந்து 32 ஆக அதிகரிக்கப்படும் என்று சர்வதேச கால்பந்து சங்க தலைவர் ஜியானி இன்பான்டினோ அறிவித்துள்ளார். அத்துடன் உலக கோப்பை போட்டிக்கான பரிசுத்தொகை அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story