கால்பந்து

பெண்கள் உலக கோப்பை கால்பந்து:அமெரிக்க அணி மீண்டும் ‘சாம்பியன்’ + "||" + Women's World Cup Football: US team again champion

பெண்கள் உலக கோப்பை கால்பந்து:அமெரிக்க அணி மீண்டும் ‘சாம்பியன்’

பெண்கள் உலக கோப்பை கால்பந்து:அமெரிக்க அணி மீண்டும் ‘சாம்பியன்’
8-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்க அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது.
லயன்,

8-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்தது. இதில் லயனில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் அமெரிக்க அணி, நெதர்லாந்தை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. 61-வது நிமிடத்தில் அமெரிக்க அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி அந்த அணி வீராங்கனை மெகன் ராபினோ கோல் அடித்தார். 69-வது நிமிடத்தில் அமெரிக்க அணி வீராங்கனை ரோஸ் லாவெல்லி 2-வது கோலை அடித்தார். பதில் கோல் திருப்ப நெதர்லாந்து அணி எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் அமெரிக்க அணி 2-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை மீண்டும் கைப்பற்றியது. அமெரிக்க அணி ஏற்கனவே 1991, 1999, 2015-ம் ஆண்டுகளில் பட்டம் வென்று இருந்தது. முந்தைய நாளில் நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் சுவீடன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை சாய்த்தது.

தொடர்புடைய செய்திகள்

1. பெண்கள் உலக கோப்பை கால்பந்து: அமெரிக்க அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்லுமா? - நெதர்லாந்துடன் இன்று மோதல்
பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில், அமெரிக்க அணி, நெதர்லாந்துடன் இன்று மோத உள்ளது.
2. பெண்கள் உலக கோப்பை கால்பந்து: ஜெர்மனியை பழிதீர்த்தது சுவீடன்
பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில் சுவீடன் அணி, ஜெர்மனியை வீழ்த்தி பழிதீர்த்து கொண்டது.
3. பெண்கள் உலக கோப்பை கால்பந்து: அரைஇறுதியில் அமெரிக்கா, நெதர்லாந்து
பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியின் அரைஇறுதியில் அமெரிக்கா, நெதர்லாந்து அணிகள் நுழைந்தன.
4. பெண்கள் உலக கோப்பை கால்பந்து: அமெரிக்க அணி அடுத்த சுற்றுக்கு தகுதி
பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில், அமெரிக்க அணி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றது.
5. பெண்கள் உலக கோப்பை கால்பந்து: அடுத்த சுற்றுக்கு சுவீடன் தகுதி
பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியின் அடுத்த சுற்றுக்கு சுவீடன் அணி தகுதிபெற்றது.