உலக கோப்பை கால்பந்து போட்டி தகுதி சுற்று: எளிதான பிரிவில் இந்திய அணி


உலக கோப்பை கால்பந்து போட்டி தகுதி சுற்று: எளிதான பிரிவில் இந்திய அணி
x
தினத்தந்தி 17 July 2019 11:40 PM GMT (Updated: 17 July 2019 11:40 PM GMT)

உலக கோப்பை கால்பந்து போட்டி தகுதி சுற்று ஆட்டத்தின், எளிதான பிரிவில் இந்திய அணி இடம்பெற்றுள்ளது.

கோலாலம்பூர்,

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் 2022-ம் ஆண்டு நடக்கிறது. இந்த போட்டிக்கான ஆசிய கண்டத்திற்கான தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இந்திய அணி கொஞ்சம் எளிதான பிரிவில் இடம் பிடித்துள்ளது. ‘இ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியாவுடன் கத்தார், ஓமன், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. அதிர்ஷ்டவசமாக இந்தியாவுக்கு ஈரான், ஜப்பான், கொரியா, ஆஸ்திரேலியா, சவுதிஅரேபியா போன்ற பலம் வாய்ந்த அணிகளை சந்திக்கும் வாய்ப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

இதில் மொத்தம் 40 ஆசிய அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் மற்றும் 2-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகள் என்று 12 அணிகள் தகுதி சுற்றுக்கான கடைசி ரவுண்டுக்கு தேர்வாகும்.


Next Story