கால்பந்து

நெய்மருக்கு எதிரான பாலியல் வழக்கை கைவிட்டது பிரேசில் போலீஸ் + "||" + Brazil police end Neymar rape probe over lack of evidence

நெய்மருக்கு எதிரான பாலியல் வழக்கை கைவிட்டது பிரேசில் போலீஸ்

நெய்மருக்கு எதிரான பாலியல் வழக்கை கைவிட்டது பிரேசில் போலீஸ்
பிரபல கால்பந்து நட்சத்திரம் நெய்மருக்கு எதிரான பாலியல் வழக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் கைவிடப்பட்டுள்ளது.
சாவ்பாவ்லோ,

பாரிஸ் செயின்ட் ஜெர்மன் கால்பந்து கிளப் அணியில் ஆடி வரும் நெய்மர், உலகிலேயே மிகவும் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். மேலும் காயத்தால் அண்மைக்காலமாக ஆடவில்லை. இந்நிலையில் பாரிஸ் நகர ஓட்டல் ஒன்றில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நெய்மர் மீது இளம்பெண் புகார் செய்துள்ளார்.

பிரேசிலை சேர்ந்த அந்த பெண், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஆகி நட்பை வளர்த்துள்ளார். இந்நிலையில் கடந்த மே மாத மத்தியில் பாரிஸ் வருமாறு அந்த பெண்ணை நெய்மர் அழைத்தாராம். அதன்படி சென்ற அப்பெண்ணை ஓட்டல் அறையில் பலாத்காரம் செய்தார் என சாவ்பாவ்லோ நகர காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

கால்பந்து நட்சத்திரமான நெய்மருக்கு எதிராக எழுந்த பாலியல் புகார், உலகம் முழுவதும்  உள்ள அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. நெய்மருக்கு எதிரான குற்றச்சாட்டை பிரேசில் போலீசார் விசாரித்து வந்தனர். 

 இந்த நிலையில், நெய்மருக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி வழக்கை கைவிடுவதாக போலீசார் அட்டார்னி ஜெனரலுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்.  இந்த விவகாரம் குறித்து கருத்து அறிய நெய்மரின் செய்தி தொடர்பாளரை தொடர்பு கொள்ள முடியவில்லை.  துவக்கத்தில் இருந்தே நெய்மர் தனக்கு எதிரான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. உன்னோவ் வழக்கை 7 நாட்களில் விசாரித்து முடிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்
உன்னோவ் வழக்கை 7 நாட்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2. உன்னோவ் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ. மீது சிபிஐ வழக்குப்பதிவு
உன்னோவ் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ. மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
3. இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 6 நாடுகளின் தலைவர்களுடன் மோடி சந்திப்பு
இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 6 நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். வர்த்தகம் மற்றும் பயங்கரவாத தடுப்பு பற்றி முக்கிய ஆலோசனை நடத்தினார்.
4. பேஷன் ஷோவில் பிரபல மாடல் அழகி மயங்கி விழுந்து மரணம்
பிரேசிலில் நடந்த பேஷன் ஷோவில் பிரபல மாடல் அழகி மயங்கி விழுந்து மரணம் அடைந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
5. போலீஸ் காவல் முடிந்து திருநாவுக்கரசு மீண்டும் சிறையில் அடைப்பு - கூட்டாளிகள் 3 பேரை விசாரிக்க முடிவு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திருநாவுக்கரசின் போலீஸ் காவல் முடிந்து நேற்று மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதைதொடர்ந்து திருநாவுக்கரசின் கூட்டாளிகள் 3 பேரை விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.