கால்பந்து

ஆகஸ்ட் 4-ல் நடைபெறுகிறது சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து போட்டி + "||" + August 4th Special Olympics International Football Tournament

ஆகஸ்ட் 4-ல் நடைபெறுகிறது சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து போட்டி

ஆகஸ்ட் 4-ல் நடைபெறுகிறது சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து போட்டி
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வரும் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நடைபெறுகிறது.
சென்னையில் நடைபெற உள்ள மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்பு சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கான  தீபம் ஏற்றப்பட்டது.

நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஆகஸ்ட் 4 முதல் 6 ஆம் தேதி வரை இந்த போட்டி நடைபெற உள்ளது. இதில் பாகிஸ்தான், சீனா, மலேசியா உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த 15-25 வயதுக்குட்பட்ட 12 ஆடவர் மற்றும் 8 பெண்கள் அணியினர் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறிஸ்துவ கல்லூரியில் இதற்கான ஒலிம்பிக் ஜோதியை நடிகர் அருண்விஜய் ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகை வரலட்சுமி சரத்குமார் கலந்து கொண்டார்.

வரும் 3ஆம் தேதி நடைபெற உள்ள இதன் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண்ரிஜிஜூ, இசையமைப்பாளர் இளையராஜா, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் என பலர் கலந்து கொள்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அணி வீரர்களுடன் இரவு விருந்துக்கு சென்ற பிரபல கால்பந்து வீரருக்கு அடி உதை
மத்திய தரைக்கடல் தீவான இபிசாவில், பார்சிலோனா நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அணி வீரர்களுடன் இரவு விருந்துக்கு சென்றிருந்தபோது கிளப்பில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.
2. இலக்கை அடையும் முன்பே அவசர கொண்டாட்டம் : வெற்றியை இழந்த வீரர்
ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வந்த நபர் இலக்கை அடையும் முன்பே வெற்றி பெற்றதாகக் கருதி கொண்டாடியதால் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
3. நாட்டுக்காக தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற் முடியாத வீராங்கனை
தந்தையின் இறுதிச்சடங்கில் கூட பங்கேற்காமல் நாட்டுக்காக விளையாடிய ஹாக்கி வீராங்கனை நாடு திரும்பியபோது தன் தாயைக் கட்டிக்கொண்டு அழும் காட்சி காண்போரையும் சோகத்தில் ஆழ்த்துகிறது.