தென்அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு குறித்து விமர்சித்த அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சிக்கு 3 மாதம் தடை


தென்அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு குறித்து விமர்சித்த அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சிக்கு 3 மாதம் தடை
x
தினத்தந்தி 3 Aug 2019 10:30 PM GMT (Updated: 3 Aug 2019 9:41 PM GMT)

சமீபத்தில் நடந்த கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் அரைஇறுதியில் அர்ஜென்டினா அணி 0–2 என்ற கோல் கணக்கில் போட்டியை நடத்தும் பிரேசிலிடம் தோல்வி கண்டது.

பியூனஸ்அயர்ஸ்,

சமீபத்தில் நடந்த கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் அரைஇறுதியில் அர்ஜென்டினா அணி 0–2 என்ற கோல் கணக்கில் போட்டியை நடத்தும் பிரேசிலிடம் தோல்வி கண்டது. இந்த தோல்விக்கு பிறகு அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சி கருத்து தெரிவிக்கையில், ‘போட்டியை நடத்தும் பிரேசில் அணிக்கு கோப்பையை வழங்க வேண்டும் என்று முடிவு செய்து தென்அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு செயல்படுகிறது. நடுவர்கள் ஒருதலைப்பட்சமாக தீர்ப்பு வழங்குகிறார்கள்’ என்று குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்திய தென்அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு மெஸ்சி சர்வதேச போட்டிகளில் விளையாட 3 மாதம் தடை விதித்துள்ளது. அத்துடன் அவருக்கு ரூ.35 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தடையை எதிர்த்து மெஸ்சி அப்பீல் செய்ய முடியும். கோபா அமெரிக்கா போட்டியில் சிலிக்கு எதிரான ஆட்டத்தில் சிவப்பு அட்டை பெற்றதற்காக மெஸ்சிக்கு ஏற்கனவே ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story