கால்பந்து

தூரந்து கால்பந்து கோப்பை: ஜாம்ஷெட்பூர் எப்ஃசி அணியை வீழ்த்திய ஈஸ்ட் பெங்கால் + "||" + Durand Cup 2019: East Bengal thumps Jamshedpur FC 6-0 - As it happened

தூரந்து கால்பந்து கோப்பை: ஜாம்ஷெட்பூர் எப்ஃசி அணியை வீழ்த்திய ஈஸ்ட் பெங்கால்

தூரந்து கால்பந்து கோப்பை: ஜாம்ஷெட்பூர் எப்ஃசி அணியை வீழ்த்திய ஈஸ்ட் பெங்கால்
பெங்கால் அணி 6-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எப்ஃசி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது
கொல்கத்தா,

129-ஆவது தூரந்து கோப்பை கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக கொல்கத்தாவில்  நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஈஸ்ட் பெங்கால் அணி 6-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எப்ஃசி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

100 ஆண்டுகள் பழமையான தூரந்து கோப்பை போட்டியில் தற்போது ஐஎஸ்எல், ஐ-லீக் அணிகள் இடம் பெற்று ஆடி வருகின்றன. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஈஸ்ட் பெங்கால் ஆட்டத்துக்கு ஜாம்ஷெட்பூர் வீரர்களால் பதிலளிக்க முடியவில்லை.
5 மற்றும் 7-ஆவது நிமிடங்களில் ஜேம் சான்டோஸும், 31-ஆவது நிமிடத்தில் பிண்டு மஹாதாவும், 75, 80-ஆவது நிமிடங்களில் வித்யாசாகர் சிங்கும், 90-ஆவது நிமிடத்தில் போதாங் ஹக்கீபும் கோலடித்து அசத்தினர். இந்த வெற்றி மூலம் தனது அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது ஈஸ்ட் பெங்கால் என்பது குறிப்பிடத்தக்கது.