கால்பந்து

அர்ஜென்டினா கால்பந்து முன்னாள் வீரர் மரணம் + "||" + Death of former Argentine footballer

அர்ஜென்டினா கால்பந்து முன்னாள் வீரர் மரணம்

அர்ஜென்டினா கால்பந்து முன்னாள் வீரர் மரணம்
அர்ஜென்டினாவின் முன்னாள் கால்பந்து வீரர் ஜோஸ் லூயிஸ் பிரவுன் நேற்று மரணமடைந்தார்.
பியூனஸ் அயர்ஸ்

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் ஜோஸ் லூயிஸ் பிரவுன் (வயது 62) மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நேற்று மரணமடைந்தார். 1986-ல் உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற அர்ஜென்டினா அணியில் இவரும் இடம் பெற்று இருந்தார். அந்த உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா 3-2 என்ற கணக்கில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தியது. இதில் அர்ஜென்டினா அணிக்காக முதல் கோல் அடித்தவர், லூயிஸ் பிரவுன் தான். அர்ஜென்டினா அணிக்காக 36 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ள அவர் ஜூனியர் அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.