கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் புதிய அணியாக ஐதராபாத் சேர்ப்பு + "||" + In the ISL football match Hyderabad join as new team

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் புதிய அணியாக ஐதராபாத் சேர்ப்பு

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் புதிய அணியாக ஐதராபாத் சேர்ப்பு
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் புதிய அணியாக ஐதராபாத் சேர்க்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டிகளில் பங்கேற்ற 8 அணிகளில் ஒன்றான புனே சிட்டி எப்.சி. அணி நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தது. கடந்த ஆண்டு 5-வது ஐ.எஸ்.எல். போட்டியின் போது வீரர்களுக்கும், பயிற்சி உதவி யாளர்களுக்கும் ஊதியம் கொடுக்க முடியாமல் திண்டாடியது. இதையடுத்து புனே சிட்டி அணி ஐ.எஸ்.எல். அமைப்பில் இருந்து கழற்றி விடப்பட்டு அதற்கு மாற்றாக புதிய அணி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய அணியின் பெயர் ஐதராபாத் எப்.சி. இந்த அணியின் உரிமையாளர்களாக தெலுங்கானா தொழிலதிபர் விஜய் மத்துரி, கேரளா பிளாஸ்டர் அணியின் முன்னாள் செயல் அதிகாரி வருண் திரிபுரனெனி ஆகியோர் உள்ளனர். அக்டோபர் 20-ந்தேதி தொடங்க உள்ள 6-வது ஐ.எஸ்.எல். சீசனில் ஐதராபாத் அணி பங்கேற்கும். ஐதராபாத் அணிக்குரிய உள்ளூர் ஆட்டங்கள் கச்சிபோவ்லி ஸ்டேடியத்தில் நடைபெறும்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி கொல்கத்தா 3-வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி கொல்கத்தா 3-வது வெற்றியை பதிவு செய்தது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் கேரளா-கொல்கத்தா மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி இன்று தொடங்க உள்ளது. முதல் ஆட்டத்தில் கேரளா-கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி அக்டோபர் 20-ந் தேதி தொடக்கம்
10 அணிகள் பங்கேற்கும் 6-வது இந்தியன் பிரிமீயர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டித் தொடர் கொச்சியில் அக்டோபர் 20-ந் தேதி தொடங்குகிறது.