கால்பந்து

சென்னையின் எப்.சி. அணியில் மேலும் ஓராண்டு தொடருகிறார், கரன்ஜித் சிங் + "||" + Chennai F.C. Team And continues for a year Karanjit Singh

சென்னையின் எப்.சி. அணியில் மேலும் ஓராண்டு தொடருகிறார், கரன்ஜித் சிங்

சென்னையின் எப்.சி. அணியில் மேலும் ஓராண்டு தொடருகிறார், கரன்ஜித் சிங்
6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி அடுத்த மாதம் 20-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான சென்னையின் எப்.சி. அணியில், கோல் கீப்பர் கரன்ஜித் சிங்கின் ஒப்பந்தம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை,


 2015-ம் ஆண்டு சென்னையின் எப்.சி. அணியில் இணைந்த 33 வயதான கரன்ஜித்சிங் கூறுகையில், ‘சென்னையின் எப்.சி. குடும்பத்தில் தொடர்ந்து நீடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சீசனில் வீரராக மட்டுமின்றி கோல் கீப்பிங் பயிற்சியாளர் பொறுப்பு எனக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பணிகளையும் சிறப்பாக செய்ய போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்’ என்றார்.

இதற்கிடையே 23 வயதான இந்திய கோல் கீப்பர் விஷால் கைத் சென்னை அணிக்கு நேற்று ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதுவரை புனே சிட்டி அணிக்காக ஆடிய அவர் இந்த சீசனில் சென்னை அணிக்காக கால்பதிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையின் குடிநீர் தேவைக்காக: 20 நாட்களில் கிருஷ்ணா நதி கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் - அதிகாரி தகவல்
சென்னையின் குடிநீர் தேவைக்காக இன்னும் 20 நாட்களில் கிருஷ்ணா நதி கால்வாயில் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
2. சென்னையின் தண்ணீர் தேவையை தீர்க்கும் ஏரிகள் வறண்டு வருவதால் கால்வாய் வெட்டி குடிநீர் எடுக்கும் பணி தீவிரம்
சென்னை மாநகருக்கு குடிநீர் வினியோகம் செய்யும் ஏரிகள் வறண்டு விடும் நிலையில் உள்ளன. இதனால் கால்வாய் வெட்டி தண்ணீர் எடுக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மாறாக வீராணம் ஏரி கைகொடுத்து வருகிறது.