கால்பந்து

உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை மெஸ்சி வென்றார் + "||" + Messi won the World's Best Footballer of the Year award

உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை மெஸ்சி வென்றார்

உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை மெஸ்சி வென்றார்
உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்சி வென்றார்.
மிலன்,

சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவிக்கிறது. தேசிய அணிகளின் கேப்டன்கள், பயிற்சியாளர்கள் மற்றும் கால்பந்து பத்திரிகையாளர் பிரதிநிதிகள் ஆகியோர் வாக்களித்து விருதுக்கு உரியவர்களை தேர்வு செய்து வருகிறார்கள்.


இந்த ஆண்டுக்கான ‘பிபா’ விருதுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. சிறந்த வீரருக்கான இறுதிப்பட்டியலில் லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்), விர்ஜில் வான் டிஜிக் (நெதர்லாந்து) ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். கடந்த சீசனில் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற லிவர்பூல் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கியவரும், ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் சிறந்த வீரர் விருதை பெற்றவருமான விர்ஜில் வான் டிஜிக் இந்த ஆண்டு விருதுக்கு தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 46 வாக்குகள் பெற்ற அர்ஜென்டினா அணியின் நட்சத்திர நாயகன் மெஸ்சி, விர்ஜில் வான் டிஜிக் (38 வாக்குகள்), கிறிஸ்டியானோ ரொனால்டோ (36 வாக்குகள்) ஆகியோரை பின்னுக்கு தள்ளி சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்றார். 2016-ம் ஆண்டு முதல் ‘பிபா’ சிறந்த வீரர் விருதை தனியாக வழங்க தொடங்கிய பிறகு மெஸ்சி முதல்முறையாக இந்த விருதை பெற்றுள்ளார். முன்பு பிரான்ஸ் கால்பந்து சங்கத்துடன் இணைந்து ‘பிபா’ இந்த விருதை வழங்கிய போது மெஸ்சி 5 முறை சிறந்த வீரர் விருதை பெற்று இருந்தார்.

இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடந்த கோலாகல விழாவில் மெஸ்சிக்கு விருது வழங்கப்பட்டது. பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வரும் 32 வயதான மெஸ்சி கடந்த சீசனில் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அதிக கோல்கள் (12) அடித்து இருந்தார். அத்துடன் லா லிகா போட்டியிலும் 36 கோல்கள் அடித்து கோல்டன் ஷூவை பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டில் நடந்த பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்க அணிக்காக 6 கோல்கள் அடித்து வெற்றியில் முக்கிய பங்கு வகித்த மெகன் ராபின்னோ உலகின் சிறந்த வீராங்கனை விருதை தனதாக்கினார். அமெரிக்க அணியின் பயிற்சியாளர் ஜில் எல்லிஸ் சிறந்த பெண் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. ‘பாரத ரத்னா விருது பெற வேண்டும்’ - மேரிகோம் ஆசை
பாரத ரத்னா விருது பெற விரும்புவதாக மேரிகோம் தெரிவித்துள்ளார்.
2. தேனிலவுக்கு சிறந்த இடம்; கேரளாவுக்கு விருது
தேனிலவுக்கு சிறந்த இடமாக தேர்வுசெய்யப்பட்ட கேரளாவுக்கு விருது வழங்கப்பட்டது.
3. அமெரிக்காவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தங்க தமிழ் மகன் விருது
அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தங்க தமிழ் மகன் விருது வழங்கப்பட்டது.
4. நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் பெரம்பலூர் மாணவருக்கு நீல் ஆம்ஸ்ட்ராங் விருது
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் பெரம்பலூர் மாணவருக்கு நீல் ஆம்ஸ்ட்ராங் விருது கலெக்டர் பாராட்டு.
5. நாட்டு நலப்பணித்திட்டத்தின் சிறந்த சேவைக்காக பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு தேசிய விருது ஜனாதிபதி வழங்கினார்
நாட்டு நலப்பணித்திட்டத்தின் சிறந்த சேவைக்காக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.