கால்பந்து

லா லிகா கால்பந்து: பார்சிலோனா அணி வெற்றி + "||" + La Liga Football: Barcelona win

லா லிகா கால்பந்து: பார்சிலோனா அணி வெற்றி

லா லிகா கால்பந்து: பார்சிலோனா அணி வெற்றி
லா லிகா கால்பந்து போட்டியில், பார்சிலோனா அணி வெற்றிபெற்றது.
பார்சிலோனா,

20 அணிகள் பங்கேற்றுள்ள லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பார்சிலோனா நகரில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி, வில்லார் ரியல் அணியை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பார்சிலோனா வீரர்கள் கிரிஸ்மான் 6-வது நிமிடத்திலும், ஆர்தர் மெலோ 15-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். முதல் பாதி ஆட்டம் முடிய ஒரு நிமிடம் இருக்கையில் வில்லார் ரியல் அணி வீரர் சான்டி காசோர்லா இடது காலால் உதைத்து பந்தை கோலுக்குள் திணித்தார். பிற்பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் பார்சிலோனா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வில்லார் ரியலை வீழ்த்தியது. பார்சிலோனா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி தசைப்பிடிப்பு காயம் காரணமாக பிற்பாதியில் களம் இறங்கவில்லை. 6-வது ஆட்டத்தில் ஆடிய பார்சிலோனா அணி 3 வெற்றி, ஒரு டிரா, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. லா லிகா கால்பந்து: பார்சிலோனா அணி 10-வது வெற்றி
லா லிகா கால்பந்து போட்டியில், பார்சிலோனா அணி தனது 10-வது வெற்றியை பதிவு செய்தது.