700 கோல்கள் அடித்து ரொனால்டோ சாதனை


700 கோல்கள் அடித்து ரொனால்டோ சாதனை
x
தினத்தந்தி 15 Oct 2019 11:43 PM GMT (Updated: 15 Oct 2019 11:43 PM GMT)

போர்ச்சுகல் அணியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ 72-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தும் பலன் இல்லை. இது ரொனால்டோவுக்கு ஒட்டுமொத்தத்தில் 700-வது கோலாகும்.

கீவ்,

ஐரோப்பிய சாம்பியன்ஷிப் (யூரோ) கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் கீவ் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த ‘பி’ பிரிவு ஆட்டத்தில் உக்ரைன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தி 6-வது வெற்றியோடு யூரோ சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

போர்ச்சுகல் அணியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ 72-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தும் பலன் இல்லை. இது ரொனால்டோவுக்கு ஒட்டுமொத்தத்தில் 700-வது கோலாகும். இந்த மைல்கல்லை எட்டிய 6-வது வீரர் என்ற சிறப்பை 34 வயதான ரொனால்டோ பெற்றார். அவர் சர்வதேச போட்டியில் மட்டும் 95 கோல்கள் அடித்துள்ளார். மற்றவை கிளப் அணிகளுக்காக அடித்தவை ஆகும். இந்த தோல்வியால் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் போர்ச்சுகல் அணி யூரோ போட்டிக்கு நேரடியாக தகுதி பெற எஞ்சிய இரு லீக்கிலும் (லிதுவேனியா, லக்சம்பர்க்குக்கு எதிராக) வெற்றி பெற்றாக வேண்டும்.

Next Story