கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் கேரளா-கொல்கத்தா மோதல் + "||" + ISL Football match starts today: Kerala-Kolkata clash in first match

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் கேரளா-கொல்கத்தா மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் கேரளா-கொல்கத்தா மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி இன்று தொடங்க உள்ளது. முதல் ஆட்டத்தில் கேரளா-கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.
கொச்சி,

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி மார்ச் மாதம் வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி., முன்னாள் சாம்பியன்கள் சென்னையின் எப்.சி, அட்லெடிகோ டி கொல்கத்தா மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ், எப்.சி.கோவா, நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), ஜாம்ஷெட்பூர், ஒடிசா எப்.சி. மும்பை சிட்டி, ஐதராபாத் எப்.சி. ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.


முதல் நாளான இன்று கொச்சி நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் ஆட்டத்தில் கேரளா-கொல்கத்தா அணிகள் (இரவு 7.30 மணி) பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னையின் எப்.சி. அணி தனது முதலாவது லீக்கில் எப்.சி.கோவாவை அவர்களது இடத்தில் சந்திக்கிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக சோனியா காந்தியுடன் இன்று சரத்பவார் சந்திப்பு
மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக சோனியா காந்தியுடன் இன்று சரத்பவார் சந்தித்து பேசுகிறார்.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி கொல்கத்தா 3-வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி கொல்கத்தா 3-வது வெற்றியை பதிவு செய்தது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.
3. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை - பிற்பகலில் முடிவு தெரிந்துவிடும்
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று (வியாழக்கிழமை) எண்ணப்படுகின்றது. இந்த தொகுதிகளை கைப்பற்ற போவது யார்? என்பது பிற்பகலில் தெரிந்துவிடும்.
4. தேசிய ஓபன் தடகளம்: ராஞ்சியில் இன்று தொடக்கம்
தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ராஞ்சியில் இன்று தொடங்க உள்ளன.
5. பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி இன்று தொடக்கம்: மேரிகோம் மீண்டும் சாதிப்பாரா?
பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி இன்று தொடங்க உள்ளது. அதில் மேரிகோம் மீண்டும் சாதிப்பாரா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.