கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு-கவுகாத்தி ஆட்டம் ‘டிரா’ + "||" + ISL Football: Bangalore-Guwahati Match 'draw'

ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு-கவுகாத்தி ஆட்டம் ‘டிரா’

ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு-கவுகாத்தி ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், பெங்களூரு-கவுகாத்தி அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிரா ஆனது.
பெங்களூரு,

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி., சென்னையின் எப்.சி, அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், எப்.சி.கோவா, நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), ஜாம்ஷெட்பூர், ஒடிசா எப்.சி. மும்பை சிட்டி, ஐதராபாத் எப்.சி. ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ‘டாப்-4’ இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.


இந்த போட்டியில் பெங்களூருவில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி. அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மழைக்கு மத்தியில் விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் பந்து அதிக நேரம் பெங்களூரு அணியின் வசம் வலம் வந்தாலும், கோல் எல்லையை நோக்கி அதிக முறை கவுகாத்தி அணியே முன்னேறியது. இருப்பினும் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. இன்று இரவு 7.30 மணிக்கு ஜாம்ஷெட்பூரில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.-ஒடிசா எப்.சி. அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ‘இந்திய அணியின் பயிற்சி முகாமை பெங்களூருவில் இருந்து மாற்ற முடியாது’ - ஆக்கி இந்தியா அறிவிப்பு
கொரோனா பாதிப்பால் ‘சாய்’ சமையல்காரர் மரணம் அடைந்தாலும் இந்திய ஆக்கி அணியின் பயிற்சி முகாமை பெங்களூருவில் இருந்து மாற்ற முடியாது என்று ஆக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.
2. பெங்களூரை உலுக்கிய பயங்கர சத்தம்; பொதுமகக்ள் அச்சம்
பெங்களூரை உலுக்கிய பயங்கர சத்தத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர் விசாரணை நடத்த கோரிக்கை விடப்பட்டு உள்ளது.
3. மே மாதம் 3-ந் தேதி வரை பெங்களூருவில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு - போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் அறிவிப்பு
மே மாதம் 3-ந் தேதி வரை பெங்களூருவில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் அறிவித்துள்ளார்.
4. எங்கள் எம்.எல்.ஏ.க்களை சந்திக்க அனுமதிக்கப்படும் வரை எனது போராட்டம் தொடரும் -காங்கிரஸ் மூத்த தலைவர்
எங்கள் எம்.எல்.ஏ.க்களை சந்திக்க அனுமதிக்கப்படும் வரை எனது போராட்டம் தொடரும் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறி உள்ளார்.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா அணி 3-வது முறையாக ‘சாம்பியன்’ - சென்னையின் எப்.சி.யை வீழ்த்தியது
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி.யை வீழ்த்தி 3-வது முறையாக கோப்பையை சொந்தமாக்கியது.