ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி-கோவா ஆட்டம் ‘டிரா’


ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி-கோவா ஆட்டம் ‘டிரா’
x
தினத்தந்தி 1 Nov 2019 11:18 PM GMT (Updated: 1 Nov 2019 11:18 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கவுகாத்தி-கோவா அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிராவானது.

கவுகாத்தி,

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கவுகாத்தியில் நடந்த நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)- எப்.சி.கோவா அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஒரு கட்டத்தில் கோவா 1-2 என்ற கோல் கணக்கில் பின்தங்கிய நிலையில் கடைசி நிமிடத்தில் மன்விர்சிங் கோல் அடித்து தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். இன்றைய லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story