கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணி 2-வது வெற்றி + "||" + ISL Football: Guwahati team wins 2nd

ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணி 2-வது வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணி 2-வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கவுகாத்தி அணி தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது.
ஐதராபாத்,

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு ஐதராபாத்தில் நடந்த 16-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)- ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் டிராவை நோக்கி நகர்ந்த நிலையில் 86-வது நிமிடத்தில் கவுகாத்தி அணிக்கு அதிர்ஷ்டம் அடித்தது. ஐதராபாத் வீரர் ஷங்கர் பந்தை கையால் கையாண்டதால் கவுகாத்தி அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை அந்த அணியின் மேக்சி பாரீரோ கோலாக்கினார். முடிவில் கவுகாத்தி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஐதராபாத்தை தோற்கடித்தது. 4-வது ஆட்டத்தில் ஆடிய கவுகாத்தி அணி 2 வெற்றி, 2 டிரா என்று 8 புள்ளியுடன் முதலிடம் வகிக்கிறது. ஐதராபாத் அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.


மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி, எப்.சி. கோவாவை எதிர்கொள்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியின் பரிதாபம் தொடருகிறது - பயிற்சியாளர் ராஜினாமா செய்ய முடிவு?
சென்னை அணியின் பயிற்சியாளர் ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளாரா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவிடம் வீழ்ந்தது மும்பை
6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு மும்பையில் நடந்த 17-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி, எப்.சி.கோவாவை எதிர்கொண்டது.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர்-பெங்களூரு ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், ஜாம்ஷெட்பூர்-பெங்களூரு அணிகளுக்கிடையிலான ஆட்டம் டிராவானது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளாவை வீழ்த்தியது ஐதராபாத்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கேரளா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணி வீழ்த்தியது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி-கோவா ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கவுகாத்தி-கோவா அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிராவானது.