கால்பந்து

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில்கடைசி நிமிட கோலால் தோல்வியில் இருந்து தப்பியது இந்தியா + "||" + World Cup Football Qualifying Round India survived last minute goal defeat

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில்கடைசி நிமிட கோலால் தோல்வியில் இருந்து தப்பியது இந்தியா

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில்கடைசி நிமிட கோலால் தோல்வியில் இருந்து தப்பியது இந்தியா
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.
துஷான்பே, 

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஆசிய கண்டத்திற்கான தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இடம் பெற்றுள்ள 40 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் மொத்தம் 12 அணிகள் 3-வது சுற்றுக்கு முன்னேறும். இதில் ‘இ’ பிரிவில் இந்திய அணியோடு, ஓமன், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், கத்தார் ஆகிய அணிகளும் அங்கம் வகிக்கின்றன.

உலக தரவரிசையில் 106-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 149-ம் நிலை அணியான ஆப்கானிஸ்தானுடன் தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் நேற்று மோதியது. குளிர்ச்சியான சீதோஷ்ண நிலைக்கு மத்தியில் இரு அணி வீரர்களும் துடிப்புடன் ஆடினர். 45-வது நிமிடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ஜெல்பஹார் நஜாரி கோல் அடித்து அதிர்ச்சி அளித்தார். பதில் கோல் திருப்ப போராடிய இந்தியாவுக்கு பல வாய்ப்புகள் நழுவிப் போயின. 67-வது நிமிடத்தில் இந்திய நட்சத்திர வீரர் சுனில்சேத்ரி கோல் நோக்கி தலையால் முட்டிய பந்தை எதிரணி கோல் கீப்பர் ஒவைஸ் அஜிஜி தடுத்து வெளியே தள்ளினார். வழக்கமான 90 நிமிடங்களுக்கு பிறகு காயம் உள்ளிட்ட விரயத்திற்காக 6 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. இதன் 3-வது நிமிடத்தில் கார்னர் பகுதியில் இருந்து வந்த பந்தை இந்திய மாற்று ஆட்டக்காரர் செய்மின்லென் டோங்கெல் தலையால் முட்டி கோலாக்கி அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்.

முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத இந்திய அணி (3 டிரா, ஒரு தோல்வி) அடுத்து ஓமன் அணியை 19-ந்தேதி மஸ்கட்டில் சந்திக்கிறது.