கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர் + "||" + ISL Football: Jamshedpur beat Goa

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கோவா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணி வீழ்த்தியது.
கோவா,

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கோவா நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய 24-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா அணி, ஜாம்ஷெட்பூரை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 17-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் செர்ஜியோ கேஸ்டல் கோல் அடித்தார். பதில் கோல் திருப்ப கோவா கடுமையாக போராடியது. பந்து கோவா (63 சதவீதம்) வசமே அதிகமாக சுற்றிக் கொண்டிருந்தது. இலக்கை நோக்கி நிறைய ஷாட்டுகளையும் அடித்தனர். ஆனால் எதுவும் கைகூடவில்லை. 72-வது நிமிடத்தில் எதிரணி வீரரை காலால் இடறி விட்ட கோவா வீரர் அகமது ஜோஹோ சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டது, அந்த அணிக்கு மேலும் பின்னடைவாக அமைந்தது. முடிவில் ஜாம்ஷெட்பூர் 1-0 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது.


இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்-மும்பை சிட்டி அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணி முதல் தோல்வி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கவுகாத்தி அணி முதல் தோல்வியை சந்தித்தது.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர்-கவுகாத்தி ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், ஜாம்ஷெட்பூர்-கவுகாத்தி அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிராவானது.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: கடைசி நிமிட கோலால் தோல்வியில் இருந்து தப்பியது கோவா
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கடைசி நிமிட கோலால் தோல்வியில் இருந்து கோவா அணி தப்பியது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் எப்.சி.-பெங்களூரு எப்.சி. அணிகள் இடையிலான ஆட்டம் டிரா
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் ஐதராபாத் எப்.சி.-பெங்களூரு எப்.சி. அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-ஒடிசா ஆட்டம் ‘டிரா’
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.