கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-ஒடிசா ஆட்டம் ‘டிரா’ + "||" + ISL Football Chennai Orissa Match Draw

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-ஒடிசா ஆட்டம் ‘டிரா’

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-ஒடிசா ஆட்டம் ‘டிரா’
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
சென்னை,

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 26-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, ஒடிசா எப்.சி.யுடன் மோதியது. ஆக்ரோஷமாக ஆடிய இரு அணி வீரர்களும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டினர். முதல் பாதியில் யாரும் கோல் அடிக்கவில்லை.


பிற்பாதியில் 51-வது நிமிடத்தில் சென்னை வீரர் வல்ஸ்கிஸ் கோல் அடித்து உள்ளூர் ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்தார். ஆனால் இந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. 54-வது நிமிடத்தில் ஒடிசா வீரர் ஸிஸ்கோ பதில் கோல் திருப்பினார். இதன் பிறகு மழை பெய்யத் தொடங்கியது. ஆனாலும் உத்வேகம் குறையாமல் இரு அணி வீரர்களும் முன்னிலை பெற தீவிரம் காட்டினர். 71-வது நிமிடத்தில் வல்ஸ்கிஸ் தலையால் முட்டி மறுபடியும் அருமையாக கோல் போட்டார். இந்த முன்னிலையையும் சென்னை அணி தக்க வைத்துக் கொள்ள தவறியது. 82-வது நிமிடத்தில் ஒடிசா வீரர் அரிடான் கோல் அடித்து ஆட்டத்தை மீண்டும் சமனுக்கு கொண்டு வந்தார்.

இறுதிகட்டத்தில் சென்னை அணியின் சில வாய்ப்புகள் நழுவிப் போயின. குறிப்பாக கோல் பகுதியில் நின்ற வல்ஸ்கிஸ் தலையால் முட்டி தள்ளிய போது பந்து கம்பத்திற்கு வெளியே சென்று ஏமாற்றி விட்டது. கடைசி நிமிடத்தில் சென்னை வீரர் லுசியான் கோயன், ஒடிசா வீரர் டிவான்டோ டயாங்கியின் காலை இடறி விட்டதால் இருவரும் அடிப்பார் போல் மோதிக் கொண்டனர். இந்த சலசலப்புடன் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 6-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி ஒரு வெற்றி, 2 டிரா, 3 தோல்வி என்று 5 புள்ளியுடன் பட்டியலில் 8-வது இடம் வகிக்கிறது. ஒடிசா அணி 6 புள்ளியுடன் (ஒரு வெற்றி, 3 டிரா, 2 தோல்வி) 6-வது இடத்தில் உள்ளது.

இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் ஐதராபாத்-பெங்களூரு எப்.சி. அணிகள் சந்திக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் ஜுலை மாதத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது?
சென்னையில் ஜுலை மாதத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
2. கொரோனா தடுப்பு நடவடிக்கை: சென்னையில் காய்ச்சல் முகாமில் 8 லட்சம் பேர் பங்கேற்பு
சென்னையில் நடத்தப்பட்ட காய்ச்சல் முகாம்களில் 8½ லட்சம் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் 10,463 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
3. சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
சென்னை முழுவதும் மொத்தமாக 64 ஆயிரத்து 689 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
4. சென்னையில் தினந்தோறும் 35 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் - மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தகவல்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் தினந்தோறும் 35 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்று மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.
5. புதிதாக 28 போலீசாருக்கு தொற்று; சென்னையில் கொரோனாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி
சென்னையில் கொரோனாவுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலியானார். புதிதாக 28 போலீசாரை நேற்று கொரோனா தாக்கியது.