ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் எப்.சி.-பெங்களூரு எப்.சி. அணிகள் இடையிலான ஆட்டம் டிரா


ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் எப்.சி.-பெங்களூரு எப்.சி. அணிகள் இடையிலான ஆட்டம் டிரா
x
தினத்தந்தி 29 Nov 2019 11:00 PM GMT (Updated: 29 Nov 2019 11:00 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் ஐதராபாத் எப்.சி.-பெங்களூரு எப்.சி. அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.


* சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வரும் ‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக் தொடரில், நேற்று நடந்த ஆட்டங்களில் ஸ்டேட் வங்கி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வேளச்சேரி கிளப்பையும், தபால் துறை அணி 2-0 என்ற கோல் கணக்கில் எஸ்.ஆர்.எம். அணியையும், ரிசர்வ் வங்கி 4-0 என்ற கோல் கணக்கில் திருமால் ஆக்கி கிளப்பையும் வென்றது.

* இரட்டை ஆதாய பிரச்சினையால் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியில் இருந்து விலகிய சச்சின் தெண்டுல்கரும், வி.வி.எஸ்.லட்சுமணும் மீண்டும் அந்த கமிட்டியில் இடம் பெற இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

* இந்திய மூத்த வீரர் டோனியின் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய போதிய காலஅவகாசம் இருப்பதாகவும், இன்னும் சில மாதங்களில் அது தெளிவாகி விடும் என்றும் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு ஐதராபாத்தில் நடந்த ஐதராபாத் எப்.சி.-பெங்களூரு எப்.சி. அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஐதராபாத்தின் சஹில் பன்வார் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டதால் 56-வது நிமிடத்தில் இருந்து 10 வீரர்களுடன் ஆடிய நிலையில் கடைசி நிமிடத்தில் ஐதராபாத் வீரர் ராபின் கோல் போட்டு தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா-மும்பை (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

* உலக கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் ‘டி’ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டங்களில் இந்திய வீரர் சத்யன் 11-13, 9-11, 11-8, 14-12, 7-11, 11-5, 11-8 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் சிமோன் காவ்சியையும், 11-3, 12-10, 7-11, 16-14, 8-11, 11-8 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீரர் குரோத் ஜோனதனையும் சாய்த்தார். இரட்டை வெற்றியை சுவைத்த தமிழகத்தை சேர்ந்த சத்யன் 4 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் முதலிடம் வகிப்பதுடன், கால்இறுதிக்கு முந்தைய சுற்றை உறுதி செய்தார்.


Next Story