கால்பந்து

ஐரோப்பிய கால்பந்து: கடினமான பிரிவில் ஜெர்மனி, போர்ச்சுகல் + "||" + European Football: Germany and Portugal in the Hard Division

ஐரோப்பிய கால்பந்து: கடினமான பிரிவில் ஜெர்மனி, போர்ச்சுகல்

ஐரோப்பிய கால்பந்து: கடினமான பிரிவில் ஜெர்மனி, போர்ச்சுகல்
ஐரோப்பிய கால்பந்து போட்டியில், ஜெர்மனி, போர்ச்சுகல் அணிகள் கடினமான பிரிவில் இடம்பெற்றுள்ளன.
புச்சாரெஸ்ட்,

24 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் மொத்தம் 12 நாடுகளில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கான குரூப் விவரம் குலுக்கல் மூலம் இறுதி செய்யப்பட்டு, அதன் தொடர்ச்சியாக போட்டி அட்டவணை வெளியிடப்பட்டது. இதன்படி ‘எப்’ பிரிவில் பலம் வாய்ந்த அணிகளான நடப்பு சாம்பியன் போர்ச்சுகல், முன்னாள் சாம்பியன் ஜெர்மனி, உலக சாம்பியன் பிரான்ஸ் மற்றும் பிளே-ஆப் சுற்றில் வெற்றி காணும் அணி இடம் பெற்றுள்ளன. உலக கோப்பை போட்டியில் 2-வது இடம் பிடித்த குரோஷியா, இங்கிலாந்து, செக்குடியரசு மற்றும் தகுதி சுற்று அணி ‘டி’ பிரிவில் அங்கம் வகிக்கிறது. ஜூன் 12-ந்தேதி நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் துருக்கி-இத்தாலி அணிகள் (ஏ பிரிவு) சந்திக்கின்றன. ஜூன் 13-ந்தேதி வேல்ஸ்-சுவிட்சர்லாந்து (ஏ பிரிவு), டென்மார்க்-பின்லாந்து (பி), பெல்ஜியம்-ரஷியா (பி) அணிகள் மோதுகின்றன.