கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர்-கவுகாத்தி ஆட்டம் ‘டிரா’ + "||" + ISL Football: Jamshedpur-Guwahati match 'draw'

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர்-கவுகாத்தி ஆட்டம் ‘டிரா’

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர்-கவுகாத்தி ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், ஜாம்ஷெட்பூர்-கவுகாத்தி அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிராவானது.
ஜாம்ஷெட்பூர்,

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் ஜாம்ஷெட்பூரில் நேற்று இரவு நடந்த 30-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.- நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதின. 28-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணி வீரர் கேஸ்டல் கோல் அடித்தார். முதல் பாதியில் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. கடைசி நிமிடத்தில் கவுகாத்தி அணியின் பனாஜியோட்டிஸ் டிரையாடிஸ் பதில் கோல் திருப்பினார். முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. 6-வது ஆட்டத்தில் ஆடிய ஜாம்ஷெட்பூர் அணி 3 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி கண்டுள்ளது. 6-வது ஆட்டத்தில் விளையாடிய கவுகாத்தி அணி 2 வெற்றி, 4 டிரா கண்டு இருக்கிறது. நாளை (புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு புனேயில் நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி.-பெங்களூரு எப்.சி. அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை-ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிராவானது.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத்தை வீழ்த்தியது கோவா
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், ஐதராபாத்தை 1-0 என்ற புள்ளி கணக்கில் கோவா அணி வீழ்த்தியது.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணி முதல் தோல்வி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கவுகாத்தி அணி முதல் தோல்வியை சந்தித்தது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: கடைசி நிமிட கோலால் தோல்வியில் இருந்து தப்பியது கோவா
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கடைசி நிமிட கோலால் தோல்வியில் இருந்து கோவா அணி தப்பியது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் எப்.சி.-பெங்களூரு எப்.சி. அணிகள் இடையிலான ஆட்டம் டிரா
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் ஐதராபாத் எப்.சி.-பெங்களூரு எப்.சி. அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.