கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத்-கொல்கத்தா ஆட்டம் ‘டிரா’ + "||" + ISL Football: Hyderabad-Kolkata game Draw

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத்-கொல்கத்தா ஆட்டம் ‘டிரா’

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத்-கொல்கத்தா ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், ஐதராபாத்-கொல்கத்தா அணிகளுக்கிடையேயான ஆட்டம் ‘டிரா’ ஆனது.
ஐதராபாத்,

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு ஐதராபாத்தில் அரங்கேறிய 43-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் சந்தித்தன. இதில் 15-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கொல்கத்தா வீரர் ராய் கிருஷ்ணா கோல் அடித்தார். 39-வது நிமிடத்தில் ஐதராபாத் வீரர் போபோ தலையால் பந்தை முட்டி கோலுக்குள் அனுப்பி சமனுக்கு கொண்டு வந்தார். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகமானது. 85-வது நிமிடத்தில் போபோ மீண்டும் ஒரு கோல் போட்டார். இதன் பிறகு கடைசி நிமிடத்தில் (90-வது நிமிடம்) கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொல்கத்தா வீரர் ராய் கிருஷ்ணா மறுபடியும் ஒரு கோல் அடித்து தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். ராய் கிருஷ்ணா இந்த சீசனில் அடித்த 8-வது கோல் இதுவாகும்.


முடிவில் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக்கில் எப்.சி. கோவா-ஒடிசா எப்.சி. அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. சிசிடிவி கேமராக்களை உலக அளவில் அதிகம் நகரங்களில் ஐதராபாத்தும் ஒன்று
சிசிடிவி கேமராக்களை உலக அளவில் அதிகம் பயன்படுத்தும் முதல் 20 நகரங்களில் 16- வது இடத்தில் ஐதராபாத் நகரம் இருப்பதாக இங்கிலாந்து நிறுவன ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. தெலுங்கானாவில் மேலும் 2,083-பேருக்கு கொரோனா தொற்று
தெலுங்கானாவில் மேலும் 2083 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தெலுங்கானாவில் கொரோனா சமூக பரவல் நிலைக்கு சென்றுவிட்டது: சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
தெலுங்கானாவில் கொரோனா தொற்று சமூக பரவல் நிலைக்கு சென்றுவிட்டது என அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
4. ஆமையை வைத்து பூஜை நடத்திய அர்ச்சகர்கள்... கொரோனாவில் இருந்து மீண்டெழுவோம் என நம்பிக்கை
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சில்கூர் பெருமாள் ஆலயத்திற்குள் புகுந்த ஆமைக்கு, அங்கிருந்த அர்ச்சகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
5. ஆண் வேடமிட்டு இளம் பெண்ணை திருமணம் செய்த 35 வயது பெண்
இரண்டு இளம்பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட நிலையில் அதில் ஒருவர் ஆண் வேடமிட்டு வாழ்ந்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.