கால்பந்து

கிளப் உலக கோப்பை கால்பந்து: லிவர்பூல் அணி ‘சாம்பியன்’ + "||" + Club World Cup Football: Liverpool team Champion

கிளப் உலக கோப்பை கால்பந்து: லிவர்பூல் அணி ‘சாம்பியன்’

கிளப் உலக கோப்பை கால்பந்து: லிவர்பூல் அணி ‘சாம்பியன்’
கிளப் உலக கோப்பை கால்பந்து போட்டியில், லிவர்பூல் அணி ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.
தோகா,

கிளப் அணிகளுக்கான 16-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வந்தது. 7 கிளப்புகள் பங்கேற்ற இந்த போட்டியில் லிவர்பூல் (இங்கிலாந்து), பிளமிங்கோ (பிரேசில்) அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தன. இதன் இறுதி ஆட்டம் தோகாவில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறியது. விறுவிறுப்பான இந்த மோதலில் வழக்கமான நேரத்தில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. இதையடுத்து கூடுதல் நேரமாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. 99-வது நிமிடத்தில் லிவர்பூல் வீரர் ராபர்ட்டோ பிர்மினோ கோல் அடித்தார். அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது.


முடிவில் லிவர்பூல் கிளப் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிளமிங்கோவை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை தட்டிச்சென்றது. இங்கிலாந்து கிளப் ஒன்று உலக கோப்பையை வெல்வது 2008-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.