கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசாவிடம் வீழ்ந்தது ஜாம்ஷெட்பூர் + "||" + ISL Football: Jamshedpur falls to Odisha

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசாவிடம் வீழ்ந்தது ஜாம்ஷெட்பூர்

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசாவிடம் வீழ்ந்தது ஜாம்ஷெட்பூர்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், ஒடிசா அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணி வீழ்ந்தது.
புவனேசுவரம்,

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்றிரவு புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்த 47-வது லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை சாய்த்தது. ஒடிசா அணியில் இரண்டு கோலையும் அரிடான் சன்டானா (28 மற்றும் 45-வது நிமிடம்) அடித்தார். உள்ளூரில் களம் இறங்கிய முதல் ஆட்டத்திலேயே வெற்றியுடன் தொடங்கி உள்ள ஒடிசா அணி மொத்தத்தில் 3 வெற்றி, 3 டிரா, 4 தோல்வி என்று 12 புள்ளியுடன் 6-வது இடம் வகிக்கிறது. இன்று இரவு 7.30 மணிக்கு கொச்சியில் நடக்கும் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்- நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 5-வது வெற்றி
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த 65-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, ஜாம்ஷெட்பூர் எப்.சி.யை சந்தித்தது.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு 7-வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஒடிசா அணிக்கு எதிரான ஆட்டத்தில், பெங்களூரு அணி தனது 7-வது வெற்றியை பதிவு செய்தது.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி. - ஒடிசா எப்.சி. அணிகள் இன்று மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில், 64-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி. , ஒடிசா எப்.சி. அணியை எதிர்கொள்கிறது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா அணி 7-வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கொல்கத்தா அணி த்னது 7-வது வெற்றியை பதிவு செய்தது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் எப்.சி. அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஆல்பர்ட் ரோக்கா நியமனம்
ஐ.எஸ்.எல். கால்பந்தில் 2020-21-ம் சீசனுக்கான ஐதராபாத் எப்.சி. அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஆல்பர்ட் ரோக்கா (ஸ்பெயின்) நியமிக்கப்பட்டுள்ளார்.