கால்பந்து

சென்னையின் எப்.சி. போட்டி அட்டவணையில் மாற்றம் + "||" + Chennai FC Change in competition schedule

சென்னையின் எப்.சி. போட்டி அட்டவணையில் மாற்றம்

சென்னையின் எப்.சி. போட்டி அட்டவணையில் மாற்றம்
சென்னையின் எப்.சி. போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கடந்த 12-ந்தேதி கவுகாத்தியில் நடக்க இருந்த சென்னையின் எப்.சி.- நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இடையிலான ஆட்டம் போராட்டம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆட்டம் பிப்ரவரி 25-ந்தேதி கவுகாத்தியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


இதே போல் போட்டி அட்டவணையிலும் சிறு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. சென்னையின் எப்.சி.- நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி. இடையே பிப்ரவரி 7-ந்தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்க இருந்த ஆட்டம் அதே இடத்தில் பிப்.9-ந்தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.