கால்பந்து

தேசிய மினி கால்பந்து போட்டியில் தமிழக அணி சாம்பியன் + "||" + Tamil National Team Champion in National Mini Football Tournament

தேசிய மினி கால்பந்து போட்டியில் தமிழக அணி சாம்பியன்

தேசிய மினி கால்பந்து போட்டியில் தமிழக அணி சாம்பியன்
தேசிய மினி கால்பந்து போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சென்னை,

தேசிய மினி கால்பந்து போட்டி (சப்-ஜூனியர்) மராட்டிய மாநிலம் புனேயில் 3 நாட்கள் நடந்தது. மினி கால்பந்து என்பது தலா 6 வீரர்கள் விளையாடும் போட்டியாகும். இதில் 12 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 14 அணிகள் பங்கேற்றன. நேற்று நடந்த இதன் இறுதி ஆட்டத்தில் தமிழக அணி , மராட்டியத்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த மோதலில் தமிழக அணி 2-0 என்ற கோல் கணக்கில் மராட்டியத்தை தோற்கடித்து கோப்பையை தட்டிச் சென்றது. தமிழக அணியில் இரண்டு கோல்களையும் இதயத்துல்லா அடித்தார். 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 16 அணிகள் கலந்து கொண்டன. இதில் தமிழக அணி 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை பெற்றது.


இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் ஸ்பெயினில் நடக்கும் மினி கால்பந்து போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் 6 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி அறிவிப்பு
ரஞ்சி கிரிக்கெட் போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
2. ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி மீண்டும் தோல்வி
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி மீண்டும் தோல்வி அடைந்தது.
3. ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி 96 ரன்னில் சுருண்டது
ரஞ்சி கிரிக்கெட் போட்டியில், இமாச்சலபிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 96 ரன்னில் சுருண்டது.
4. சையத் முஸ்தாக் கிரிக்கெட்: தமிழக அணி வெற்றி
சையத் முஸ்தாக் கிரிக்கெட் போட்டியில், தமிழக அணி வெற்றிபெற்றது.
5. தேசிய ஜூனியர் தடகளம்: தமிழக அணியில் 148 வீரர்-வீராங்கனைகள்
தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக அணியில் 148 வீரர்-வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.