ஐ.எஸ்.எல். கால்பந்து சென்னை அணி 4-வது வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து சென்னை அணி 4-வது வெற்றி
x
தினத்தந்தி 16 Jan 2020 10:00 PM GMT (Updated: 16 Jan 2020 7:40 PM GMT)

12–வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி பெற்ற 4–வது வெற்றி இதுவாகும்.

சென்னை, 

6–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடரில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 60–வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.–நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. பின் பாதி ஆட்டத்தில் சென்னை அணி அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து அசத்தியது. சென்னை அணி வீரர்கள் கிரிவெல்லாரோ 57–வது நிமிடத்திலும், வல்ஸ்கிஸ் 59–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். கவுகாத்தி அணி கோல் திருப்ப எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் சென்னை அணி 2–0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தி அணியை வீழ்த்தியது. 12–வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி பெற்ற 4–வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் 8–வது இடத்தில் இருந்து 6–வது இடத்துக்கு முன்னேறியது.

Next Story