கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா அணி 7-வது வெற்றி + "||" + ISL Football: Kolkata team 7th wins

ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா அணி 7-வது வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா அணி 7-வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கொல்கத்தா அணி த்னது 7-வது வெற்றியை பதிவு செய்தது.
கொல்கத்தா,

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடரில் கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த 62-வது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா-எப்.சி.கோவா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 2-0 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வீழ்த்தியது. கொல்கத்தா அணியில் 47-வது நிமிடத்தில் பிரித்தமும், 88-வது நிமிடத்தில் ரானேவும் கோல் அடித்தனர். 13-வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தா அணி பெற்ற 7-வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு உயர்ந்தது. 13-வது ஆட்டத்தில் விளையாடிய கோவா அணி சந்தித்த 3-வது தோல்வி இது. இதனால் கோவா அணி முதலிடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு இறங்கியது.


இன்று இரவு 7.30 மணிக்கு ஜாம்ஷெட்பூரில் நடைபெறும் 63-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பையை வீழ்த்தி கோவா அணி 11-வது வெற்றி
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? பெங்களூருவுடன் இன்று மோதல்
6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 78-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி.யை சந்திக்கிறது.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணி 10-வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கோவா அணிதனது 10-வது வெற்றியை பதிவு செய்தது.
4. ஐ.எஸ்.எல் கால்பந்து: கொல்கத்தா அணி வெற்றி
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா அணி வெற்றிபெற்றது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி கோல் மழை
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணி கோல் மழை பொழிந்தது.