ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா அணி 8-வது வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா அணி 8-வது வெற்றி
x
தினத்தந்தி 27 Jan 2020 11:54 PM GMT (Updated: 27 Jan 2020 11:54 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கொல்கத்தா அணி தனது 8-வது வெற்றியை பதிவு செய்தது.

கொல்கத்தா,

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடரில் கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த 68-வது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா-நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 1-0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தி அணியை வீழ்த்தி 8-வது வெற்றியை பதிவு செய்தது. கடைசி நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரர் பல்வந்த் சிங் வெற்றிக்கான கோலை அடித்தார். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறியது.

புவனேசுவரத்தில் நாளை (புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 69-வது லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் மோதுகின்றன.

Next Story