கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? பெங்களூருவுடன் இன்று மோதல் + "||" + ISL Football Today clash with Bengaluru

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? பெங்களூருவுடன் இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? பெங்களூருவுடன் இன்று மோதல்
6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 78-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி.யை சந்திக்கிறது.
சென்னை,

14 ஆட்டத்தில் விளையாடி 6 வெற்றி, 3 டிரா, 5 தோல்வியுடன் 21 புள்ளிகள் பெற்றுள்ள சென்னை அணி புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி 15 ஆட்டத்தில் விளையாடி 8 வெற்றி, 4 டிரா, 3 தோல்வி என்று 28 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது.


கடந்த 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றியை ருசித்துள்ள சென்னை அணி உள்ளூரில் ஆடும் கடைசி லீக் போட்டி இதுவாகும். எனவே தனது உள்ளூர் சீசனை வெற்றியுடன் முடிக்க சென்னை அணி தீவிர முனைப்பு காட்டும். ஆனால் பெங்களூரு அணியும் நல்ல பார்மில் இருப்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம். இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

முன்னதாக நேற்றிரவு கொல்கத்தாவில் நடந்த ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி ராய் கிருஷ்ணாவின் ‘ஹாட்ரிக்’ கோல் உதவியுடன் 3-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா எப்.சி.யை வீழ்த்தியது. 10-வது வெற்றியை சுவைத்த கொல்கத்தா அணி அரைஇறுதியை உறுதிசெய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா அணி 3-வது முறையாக ‘சாம்பியன்’ - சென்னையின் எப்.சி.யை வீழ்த்தியது
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி.யை வீழ்த்தி 3-வது முறையாக கோப்பையை சொந்தமாக்கியது.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் 3-வது முறையாக கோப்பையை வெல்வது யார்? - சென்னை-கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவாவில் இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
3. ஐ.எஸ்.எல். கால்பந்தில் பெங்களூரை தோற்கடித்து கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் பெங்களூரை தோற்கடித்து கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதிப்போட்டியில் சென்னையின் எப்.சி.
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி, கோவாவுக்கு எதிரான 2-வது அரைஇறுதியில் தோற்ற போதிலும் கோல் வித்தியாசம் அடிப்படையில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து அரைஇறுதி சுற்றில் கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு
ஐ.எஸ்.எல். கால்பந்து அரைஇறுதி சுற்றில் கொல்கத்தாவை பெங்களூரு அணி வீழ்த்தியது.