கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை + "||" + I.S.L. Football, Kolkata beat Chennai

ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை

ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணி 3-1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
கொல்கத்தா, 

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நேற்றிரவு நடந்த 84-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னையின் எப்.சி.யும், அட்லெடிகோ டி கொல்கத்தாவும் மல்லுகட்டின.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சென்னை வீரர்கள் அடிக்கடி எதிரணி கோல் எல்லையை முற்றுகையிட்டு ஷாட்டுகள் அடித்தனர். 7-வது நிமிடத்தில் ரபெல் கிரிவெலரோவும், 39-வது நிமிடத்தில் ஆந்த்ரே ஸ்கெம்ப்ரியும் கோல் அடித்து சென்னை அணிக்கு வலுவான முன்னிலையை ஏற்படுத்தி தந்தனர். 40-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ராய் கிருஷ்ணன் கோல் திருப்பினார். நடப்பு தொடரில் அவரது 14-வது கோல் இதுவாகும்.

பிற்பாதியில் ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வர கொல்கத்தா வீரர்கள் கடுமையாக போராடிய போதிலும், சென்னை அணியின் தடுப்பு அரணை உடைக்க முடியவில்லை. கடைசி நிமிடத்தில் சென்னை நட்சத்திர வீரர் வல்ஸ்கிஸ் கோல் போட்டார். 

முடிவில் சென்னை அணி 3-1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை சாய்த்தது. 16-வது லீக்கில் ஆடிய சென்னை அணி 7 வெற்றி, 4 டிரா, 5 தோல்வி என்று 25 புள்ளிகளுடன் பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியதுடன் அரைஇறுதி வாய்ப்பையும் பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. 

ஏற்கனவே அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட்ட கொல்கத்தா அணி தொடர்ச்சியாக 4 வெற்றிக்கு பிறகு சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். 19-ந்தேதி நடக்கும் அடுத்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர்-கோவா அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பை, கொல்கத்தா, ஜெய்ப்பூர், இந்தூரில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது - மத்திய அரசு
மும்பை, கொல்கத்தா, ஜெய்ப்பூர், இந்தூரில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2. அமித்ஷாவை கொல்கத்தாவுக்குள் அனுமதிக்க மாட்டோம்: மேற்கு வங்காள மந்திரி மிரட்டல்
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறும் வரை அமித்ஷாவை கொல்கத்தாவுக்குள் அனுமதிக்க மாட்டோம் என மேற்கு வங்காள மந்திரி மிரட்டல் விடுத்துள்ளார்.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் கொல்கத்தாவை வீழ்த்தியது, கோவா அணி
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் கோவா அணி, கொல்கத்தாவை வீழ்த்தியது.