கால்பந்து

நவிமும்பையில், ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி + "||" + In navimumbai, Junior Girls World Cup Football The final

நவிமும்பையில், ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி

நவிமும்பையில், ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி
சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) சார்பில் ஜூனியர் 7-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்குட்பட்டோர்) இந்தியாவில் முதல்முறையாக நடத்தப்படுகிறது.
16 அணிகள் பங்கேற்கும் இந்த கால்பந்து திருவிழா நவம்பர் 2-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை கொல்கத்தா, ஆமதாபாத், புவனேசுவரம், நவி மும்பை, கவுகாத்தி ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. இந்த நிலையில் நவம்பர் 21-ந்தேதி நடக்கும் இறுதிப்போட்டிக்கு மும்பை புறநகரான நவிமும்பை தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். நவம்பர் 12 மற்றும் 13-ந்தேதிகளில் கால்இறுதி ஆட்டங்களும், 17-ந்தேதி அரைஇறுதி ஆட்டங்களும் நடைபெறுகிறது.