ஆசிய சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு கோவா அணி தகுதி பெற்று சாதனை


ஆசிய சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு கோவா அணி தகுதி பெற்று சாதனை
x
தினத்தந்தி 19 Feb 2020 11:03 PM GMT (Updated: 19 Feb 2020 11:03 PM GMT)

ஏ.எப்.சி. சாம்பியன்ஸ் லீக் குரூப் சுற்று போட்டிக்கு எப்.சி.கோவா அணி தகுதி பெற்று வரலாறு படைத்தது.

ஜாம்ஷெட்பூர், 

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் ஜாம்ஷெட்பூரில் நேற்றிரவு அரங்கேறிய 85-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.யை பந்தாடியது. கோவா அணியில் பெர்ரன் கோரோமினாஸ் (11-வது நிமிடம்), ஹூகோ பவுமோஸ் (70 மற்றும் 90-வது நிமிடம்), ஜாக்கிசந்த் சிங் (84-வது நிமிடம்), மோர்தடா பால் (87-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். தனது கடைசி லீக்கில் ஆடிய கோவா அணி 12 வெற்றி, 3 டிரா, 3 தோல்வி என்று 39 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது. முதலிடத்தை உறுதி செய்ததன் மூலம், 2021-ம் ஆண்டில் நடக்கும் ஆசிய கண்டத்தை சேர்ந்த கிளப் அணிகளுக்கான ஏ.எப்.சி. சாம்பியன்ஸ் லீக் குரூப் சுற்று போட்டிக்கு எப்.சி.கோவா அணி தகுதி பெற்று வரலாறு படைத்தது. இந்தியாவைச் சேர்ந்த ஒரு கிளப் இந்த போட்டியின் குரூப் சுற்றில் நேரடியாக விளையாட இருப்பது இதுவே முதல் முறையாகும்.

Next Story