கால்பந்து

2022-ம் ஆண்டு ஆசிய கோப்பைக்கான பெண்கள் கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றது + "||" + India has the opportunity to host the women's soccer tournament for the 2022 Asian Cup

2022-ம் ஆண்டு ஆசிய கோப்பைக்கான பெண்கள் கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றது

2022-ம் ஆண்டு ஆசிய கோப்பைக்கான பெண்கள் கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றது
2022-ம் ஆண்டு ஆசிய கோப்பைக்கான பெண்கள் கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது.
கோலாலம்பூர்,

2022-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து போட்டியை நடத்த உரிமை கேட்டு இந்தியா, சீனதைபே, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் விண்ணப்பித்து இருந்தன. இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்த ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் பெண்கள் கமிட்டி, 2022-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையை இந்தியாவுக்கு வழங்குவதாக நேற்று அறிவித்தது. 

இந்த போட்டியை நவிமும்பை, ஆமதாபாத், கோவா ஆகிய இடங்களில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக இந்திய கால்பந்து சங்கம் தெரிவித்து இருந்தது. போட்டி அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்பட இருக்கிறது. போட்டி அட்டவணை பின்னர் முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய அணி ஆசிய கோப்பை போட்டிக்கு வராவிட்டால் உலக கோப்பை போட்டியை புறக்கணிப்போம் - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல்
இந்திய அணி ஆசிய கோப்பை போட்டிக்கு வராவிட்டால் உலக கோப்பை போட்டியை புறக்கணிப்போம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் விடுத்துள்ளது.