கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையில் நடைபெறும் அரைஇறுதி போட்டிக்கான டிக்கெட் விற்பனை + "||" + ISL Football: Tickets for the semi-final match in Chennai

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையில் நடைபெறும் அரைஇறுதி போட்டிக்கான டிக்கெட் விற்பனை

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையில் நடைபெறும் அரைஇறுதி போட்டிக்கான டிக்கெட் விற்பனை
சென்னையில் நடைபெறும் ஐ.எஸ்.எல். கால்பந்தின் அரைஇறுதி போட்டிக்கான டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது.
சென்னை,

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடரில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் நடைபெறும் அரை இறுதியின் முதல் சுற்று ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, எப்.சி.கோவா அணியை எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.250 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை வரை நேரு ஸ்டேடியத்தில் (வாசல் எண் 10) உள்ள புக் மை ஷோ பாக்ஸ் ஆபீசில் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என்றும் போட்டி நாளன்று டிக்கெட் விற்பனை நேரு உள்விளையாட்டு அரங்குக்கு (வாசல் எண் 1) மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புக் மை ஷோ செயலி மற்றும் இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நாங்கள் எங்களை தனிமைப்படுத்தி கொண்டோம் என கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்ததால் சர்ச்சை
நாங்கள் எங்களை தனிமைப்படுத்தி கொண்டோம் என கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.
2. கொரோனா தடுப்பு நடவடிக்கை: சென்னையில் வீட்டு கண்காணிப்பில் 2,647 பேர்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் வீட்டு கண்காணிப்பில் 2,647 பேர் வைக்கப்பட்டுள்ளனர்.
3. கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கை: சென்னை, காஞ்சீபுரம், ஈரோடு உள்பட 80 மாவட்டங்களை தனிமைப்படுத்த முடிவு
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் சென்னை, காஞ்சீபுரம், ஈரோடு உள்பட இந்தியா முழுவதும் 80 மாவட்டங்களை தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும்.
4. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்வு - அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்
அயர்லாந்தில் இருந்து சென்னை திரும்பிய மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவரையும் சேர்த்து தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
5. கொரோனா வைரஸ் பீதியால் சென்னை வந்து செல்லவேண்டிய 118 விமானங்கள் ரத்து
கொரோனா வைரஸ் பீதியால் பயணிகள் வரத்து குறைவால் சென்னை வந்து செல்ல வேண்டிய 118 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன.