கால்பந்து

போலி பாஸ்போர்டுடன் பராகுவே நாட்டிற்குள் நுழையமுயன்ற கால்பந்து வீரர் ரொனால்டினோ கைது + "||" + Ronaldinho, brother cited in Paraguay over altered passports

போலி பாஸ்போர்டுடன் பராகுவே நாட்டிற்குள் நுழையமுயன்ற கால்பந்து வீரர் ரொனால்டினோ கைது

போலி பாஸ்போர்டுடன் பராகுவே நாட்டிற்குள்  நுழையமுயன்ற கால்பந்து வீரர் ரொனால்டினோ கைது
போலி பாஸ்போர்டுடன் பராகுவே நாட்டிற்குள் நுழைந்ததற்காக பராகுவே காவல்துறையினரால் பிரபல கால்பந்து வீரர் ரொனால்டினோ கைது செய்யப்பட்டார்.
பராகுவே

பிரேசிலின் சிறந்த கால்பந்தாட்ட வீரரான ரொனால்டினோ 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான ஃபிஃபா விருதினையும், 2005 ஆம் ஆண்டு பாலோன் டி'ஓர் விருதையும் வென்றவர்.பிரேசில் 2002 ஆம் ஆண்டு  உலக கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர்.

இந்த நிலையில்  ரொனால்டினோ  தென் அமெரிக்க நாட்டிற்குள் நுழைய தவறான ஆவணங்களைப் பயன்படுத்தியதாக பராகுவேயில் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதன்கிழமை இரவு ரொனால்டினோவும் அவரது சகோதரர் ராபர்டோவும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. போலி பாஸ்போர்ட் தொடர்பான புகாரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவது வித்தியாசமானது; மன ரீதியாக தயாராக வேண்டும்-லியோனல் மெஸ்சி
லியோனல் மெஸ்சி லா லிகாவுக்கு போட்டிக்காக காத்திருக்கிறார், ஆனால் ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவதில் அவர் விருப்பம் கொண்டுள்ளார்.
2. தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி
தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் தொடங்கி, நடந்து வருகின்றன.