கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்தில் பெங்களூரை தோற்கடித்து கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் + "||" + ISL Kolkata advance to the final by defeating Bangalore in football

ஐ.எஸ்.எல். கால்பந்தில் பெங்களூரை தோற்கடித்து கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ஐ.எஸ்.எல். கால்பந்தில் பெங்களூரை தோற்கடித்து கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் பெங்களூரை தோற்கடித்து கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
கொல்கத்தா,

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் அட்லெடிகோ டி கொல்கத்தாவுக்கு எதிரான அரைஇறுதியின் முதலாவது சுற்றில் நடப்பு சாம்பியனான பெங்களுரு எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.


இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான அரைஇறுதியின் 2-வது சுற்று கொல்கத்தாவில் நேற்றிரவு நடந்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 5-வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் ஆசிக் குருனியன் கோல் அடித்தார். இதனால் நெருக்கடிக்குள்ளான கொல்கத்தா அணியினர் தாக்குதல் பாணியை கையாண்டனர். இதன் பலனாக 30-வது நிமிடத்தில் ராய் கிருஷ்ணாவும், 63-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் டேவிட் வில்லியம்சும் கோல் அடித்தனர். இதைத் தொடர்ந்து 79-வது நிமிடத்தில் பெங்களூரு வீரர்களுக்கு ‘தண்ணி’ காட்டி விட்டு கொல்கத்தா வீரர் பிரபிர் தாஸ் தூக்கியடித்த பந்தை, சக வீரர் டேவிட் வில்லியம்ஸ் தலையால் முட்டி கோலாக்கினார். மேலும் ஒரு கோல் அடித்தால் ஆட்டத்தை தங்கள் பக்கம் இழுக்கலாம் என்று கடைசி கட்டத்தில் பெங்களூரு அணியினர் கடுமையாக போராடியும் பலன் இல்லை.

முடிவில் கொல்கத்தா அணி 3-1 என்ற கணக்கில் பெங்களூரு எப்.சி.யை வீழ்த்தியது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில் கோல் எண்ணிக்கை அடிப்படையில் கொல்கத்தா அணி (3-2) இறுதிப்போட்டி வாய்ப்பை வசப்படுத்தியது.

2 முறை சாம்பியனான கொல்கத்தா அணி வருகிற 14-ந்தேதி கோவாவில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.யுடன் மல்லுகட்டுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்து அணியிடம் வேண்டுமென்றே இந்தியா தோற்றதாக சொல்லவில்லை: பாகிஸ்தான் வீரருக்கு பென் ஸ்டோக்ஸ் பதிலடி
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் வேண்டுமென்றே இந்தியா தோற்றதாக சொல்லவில்லை என்று பாகிஸ்தான் வீரருக்கு பென் ஸ்டோக்ஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா அணி 3-வது முறையாக ‘சாம்பியன்’ - சென்னையின் எப்.சி.யை வீழ்த்தியது
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி.யை வீழ்த்தி 3-வது முறையாக கோப்பையை சொந்தமாக்கியது.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் 3-வது முறையாக கோப்பையை வெல்வது யார்? - சென்னை-கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவாவில் இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதிப்போட்டியில் சென்னையின் எப்.சி.
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி, கோவாவுக்கு எதிரான 2-வது அரைஇறுதியில் தோற்ற போதிலும் கோல் வித்தியாசம் அடிப்படையில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து அரைஇறுதி சுற்றில் கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு
ஐ.எஸ்.எல். கால்பந்து அரைஇறுதி சுற்றில் கொல்கத்தாவை பெங்களூரு அணி வீழ்த்தியது.