கால்பந்து

உலகின் சிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ - பீலே பாராட்டு + "||" + World's Best Footballer Cristiano Ronaldo - Pele

உலகின் சிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ - பீலே பாராட்டு

உலகின் சிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ - பீலே பாராட்டு
உலகின் சிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ என்று பீலே பாராட்டியுள்ளார்.
ரியோ டி ஜெனீரோ,

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே, உலக கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே வீரர். தனது 22 ஆண்டு கால தொழில்முறை கால்பந்து வாழ்க்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்களை அடித்த சாதனையாளர். 79 வயதான பீலே அளித்த ஒரு பேட்டியில், ‘தற்போதைய கால்பந்து உலகின் மிகச்சிறந்த வீரர் போர்ச்சுக்கல்லின் கிறிஸ்டியானா ரொனால்டோ தான். ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 

இருப்பினும் அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்சியையும் மறக்க முடியாது. ஜிகோ, ரொனால்டினோ, ரொனால்டோ நஜாரியோ, பிரான்ஸ் பெக்கென்பாயர், ஜோஹன் கிரைப், மரடோனா ஆகியோர் எனக்கு பிடித்தமான வீரர்கள். ஆனால் கால்பந்து உலகில் ஒரே கிங் தான். அது பீலே தான். மற்றவர்களை விட இவரே சிறந்தவர்’ என்றார்.